044 26743842 / +91 9444817394 tamilarsamayam2010@gmail.com

2.1.6. உயிரின் வளர்ச்சிப் படிநிலைகள்

உயிரின் வளர்ச்சிப் படிநிலைகளைத் தமிழ் இலக்கணம் ஆறு பிரிவுகளாகப் பிரித்துக் கூறுகிறது.

  1. ஓரறிவுயிர் – தொடு உணர்வை அறிதல், உடலை மட்டும் கொண்டது. (மரம், செடி, கொடி முதலியன)
  2. ஈரறிவுயிர் – தொடு உணர்வுடன் சுவையுணர்வை அறியும் வாயையும் கொண்டது. (மண்புழு போன்றவை)
  3. மூவறிவுயிர் – தொடுவுணர்வு, சுவையுணர்வுடன் நுகர்வுணர்வை அறியும் மூக்கையும்    கொண்டது. (எறும்பு, சிதல் போன்றவை)
  4. நாலறிவுயிர் – மூவறிவுடன், காட்சியை அறியும் கண்களையும் கொண்டது. (நண்டு, தும்பி முதலியன.
  5. ஐந்தறிவுயிர் – நாலறிவுடன் கேள்வியை அறியும் செவிகளையும் கொண்டது. (விலங்குகள், பறவைகள் போன்றவை)
  6. ஆறறிவுயிர்   – ஐந்து அறிவுடன், ஆறாவதாகிய பகுத்தறிவையும் கொண்டது. (மனிதர்கள்)

மேலே கூறப்பட்டுள்ளவைகளிலிருந்து, தமிழ் இலக்கணம் உயிரினங்களை ஆறுவகைகளாகப் பிரித்து ஆராய்ந்துள்ளமை தெரிகிறது.